Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மாமன்றக் கூட்டங்கள்: புதிய நெறிமுறை வெளியீடு

மாமன்றக் கூட்டங்கள்: புதிய நெறிமுறை வெளியீடு

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை.

பகிரவும் WhatsApp Facebook

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு மாமன்றக் கூட்டங்கள் கண்ணியத்துடன் முறையாக நடப்பதை உறுதி செய்ய மன்ற அரங்கில் இருக்கை வசதிகள் அமைப்பது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: மன்றக் கூட்ட அரங்கில் மையப்பகுதியில், உயர்ந்த மேடையில் மாமன்ற மேயர், நகர்மன்ற தலைவர் அல்லது பேரூராட்சி மன்றத் தலைவர் அமர வேண்டும்.

மேடைத் தலைவருக்கு இடதுபுறத்தில் துணை மேயர், நகர்மன்றத் துணைத் தலைவர் அல்லது பேரூராட்சி துணைத் தலைவரும், வலதுபுறத்தில் நிர்வாகத் தலைவரான மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர் அல்லது செயல் அலுவலரும் அமர வேண்டும்.

அதேபோல், மன்றக் கூட்டங்களில் பங்கேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்வதற்கு வசதியாக மன்றக் கூடத்தில் பிரதானமான இடத்தில் சிறப்பு இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மேடைக்கு எதிரே உள்ள வரிசைகளில் கவுன்சிலர்கள் அமர வைக்கப்பட வேண்டும்.

உறுப்பினர்களை அமர வைக்கும் போது வார்டு எண்களின் வரிசைப்படி இடமிருந்து வலமாகவோ அல்லது வலமிருந்து இடமாகவோ இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும். நியமன உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் இணைத்து அமரச் செய்ய வேண்டும்.

மன்ற நிகழ்வுகளைக் கவனித்து ஒருங்கிணைக்கும் உள்ளாட்சி அமைப்பின் துறை சார்ந்த அலுவலர்களுக்கும், மன்ற நடவடிக்கைகளைச் சேகரிக்கும் உள்ளூர் பத்திரிகை, ஊடக நிருபர்களுக்கும் போதுமான இடவசதி மன்ற அரங்கிற்குள் செய்து தரப்பட வேண்டும்.

முந்தைய செய்தி
அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - புகார் எண் இதோ
அடுத்த செய்தி
முஸ்லீமாக மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பெற முடியாது

தொடர்புடைய செய்திகள்